ஹோர்முஸ் ஜலசந்திக்கு (Strait of Hormuz) அருகிலுள்ள கடல் பகுதிகளில் தங்களது கடற்கொள்ளை
எதிர்ப்புப் படையான ‘செங்ஹே’ (Cheonghae) பிரிவின் செயல்பாடுகளை விரிவுபடுத்தத் தென் கொரியா திட்டமிட்டுள்ளது.
தென் கொரியக் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஏடன் வளைகுடாவில் செயல்பட்டு வரும் இந்தச் சிறப்புப் படையின் எல்லை, ஓமானின் தெற்குப் பகுதி வரை நீட்டிக்கப்படவுள்ளது.
வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்யும் நோக்கில், கூடுதல் ராணுவ வீரர்கள், P-8A கடல்சார் கண்காணிப்பு
விமானங்கள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் நிபுணர் குழுக்கள் உள்ளிட்ட கூடுதல் ராணுவ பலம் இந்தப் படைப்பிரிவில் சேர்க்கப்பட உள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியிலான கடல்சார் வணிகப் பாதைகளைப் பாதுகாக்கவும் பிராந்தியப் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

