“துணைக்கு யாரும் இல்லாமல் பறிபோன உயிர்!”

“துணைக்கு யாரும் இல்லாமல் பறிபோன உயிர்!” – பதுளை பேருந்து நிலையத்தில் உறவினர்கள் கதறி அழுத சோக பின்னணி!

பதுளை போதனா வைத்தியசாலைக்கு கிளினிக் சிகிச்சைக்காக வருகை தந்த நபரொருவர், பதுளை பிரதான பேருந்து நிலையத்தில் இன்று (03) காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் பசறை – லுணுகலை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த அவரது உறவினர்கள் சடலத்தை கண்ணீருடன் அடையாளம் காட்டியுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நமது வீடுகளில் உள்ள வயோதிபர்களும், நோயாளிகளுமான பெரியவர்கள் மருத்துவ தேவைகளுக்காக வைத்தியசாலைகளுக்குச் செல்லும்போது, அவர்களை ஒருபோதும் தனியாக அனுப்ப வேண்டாம்.

பயணங்களின் போதும், நீண்ட நேர காத்திருப்புகளின் போதும் அவர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு அல்லது மயக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

எனவே, அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் யாராவது கண்டிப்பாக உடன் துணைக்குச் செல்வது மிக அவசியமாகும்.

Recommended For You

About the Author: admin