அக்குறணை குடுகலையில் வர்த்தக நிலையம் ஒன்றில் பாரிய தீப்பரவல் – உயிர்ச்சேதம் இல்லை!

அக்குறணை குடுகலையில் வர்த்தக நிலையம் ஒன்றில் பாரிய தீப்பரவல் – உயிர்ச்சேதம் இல்லை!

கண்டி, அக்குறணை – குடுகலை பகுதியில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (04) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீ விபத்து காரணமாக அப்பகுதியின் பிரதான வீதியில் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் உயிர்ச்சேதமோ காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் கடுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin