ரியாத் செல்லும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் ஒக்டோபர் 18 வரை இடைநிறுத்தம்!

ரியாத் செல்லும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் ஒக்டோபர் 18 வரை இடைநிறுத்தம்!

சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, ரியாத் செல்லும் அனைத்து விமான சேவைகளையும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை இடைநிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

 

குறித்த பாதுகாப்புச் சம்பவம் மற்றும் நிலவும் சூழ்நிலைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்த இடைநிறுத்தம் காரணமாக ரியாத் செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது விமானப் பயண அட்டவணை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் ஊடாக உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Recommended For You

About the Author: admin