கொழும்பு துறைமுக நகருக்கு அருகில் இரு குழுக்களிடையே மோதல்; ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பு துறைமுக நகருக்கு அருகிலுள்ள தொழிலாளர் தங்குமிடப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதமே இந்தக் கத்திக்குத்துத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு துறைமுகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

