மெட்ரோ பேருந்து மீது திட்டமிட்டு மோதியதாகக் குற்றச்சாட்டு; 44 வயது சாரதி கைது!

மெட்ரோ பேருந்து மீது திட்டமிட்டு மோதியதாகக் குற்றச்சாட்டு; 44 வயது சாரதி கைது!

கொழும்பு–கேஸ்பேவ வீதியின் மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பேருந்து மீது திட்டமிட்டு மோதியதாகக் கூறப்படும் 44 வயதுடைய பேருந்து சாரதி ஒருவர் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஹொரணை–கொழும்பு வழித்தடத்தில் 120ஆம் இலக்கத்தின் கீழ் சேவையில் ஈடுபட்ட சொகுசுப் பேருந்தைச் செலுத்திய சாரதி, கஹதுடுவையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மெட்ரோ பேருந்தின் முன்பக்க வலது பகுதியில் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இந்தச் சம்பவத்தில் மெட்ரோ பேருந்தின் பக்கக் கண்ணாடி மற்றும் ஜன்னல் சேதமடைந்துள்ளதுடன், சுமார் 342,000 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Recommended For You

About the Author: admin