14 வயது மாணவனைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
14 வயது மாணவனுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், 49 வயதுடைய பாடசாலை ஆசிரியைக்கு மொனராகலை மேல் நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2019 செப்டெம்பர் மாதத்தில் மாணவனைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியைக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. மூன்று குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 8 ஆண்டுகள் வீதம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோதிலும், அவை ஒரே நேரத்தில் அமுல்படுத்தப்படுவதால் மொத்தம் 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 7.5 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கவும், 50,000 ரூபா அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

