குருநாகலில் சட்டவிரோத வேட்டைப் பொறிகள் அகற்றம்

குருநாகலில் சட்டவிரோத வேட்டைப் பொறிகள் அகற்றம்; 60 அதிகாரிகள் இணைந்து விசேட நடவடிக்கை!

இலங்கையின் குருநாகல் மாவட்டம், கல்கமுவ பகுதியில் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு நாள் விசேட நடவடிக்கையில் பெருமளவிலான சட்டவிரோத வேட்டைப் பொறிகள் அகற்றப்பட்டுள்ளன.

 

ஒக்டோபர் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த சுமார் 60 அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

நீர்த்தேக்கப் பகுதிகள் மற்றும் புதர்நிலங்களில் வைக்கப்பட்டிருந்த விலங்குப் பொறிகள் மற்றும் வெடிபொருள் பொறிகள் அகற்றப்பட்டன. சட்டவிரோத துப்பாக்கிகள், வேட்டைப் பொறிகள், இறைச்சி மற்றும் விலங்குகளின் உடற்பாகங்களை வைத்திருந்த சந்தேகநபர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin