றியாத் விமான நிலையத்தில் நின்றிருந்த விமானத்தில் கரும்புகை!!

றியாத் விமான நிலையத்தில் நின்றிருந்த விமானத்தில் கரும்புகை!!

தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக ஹூதிகள் உரிமை கோரல்!

சவூதி அரேபியாவின் தலைநகர் றியாத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் விமானம் ஒன்றில் இருந்து கடும் புகை வெளியேறியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் வான்வெளி மற்றும் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள்,

றியாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக உரிமை கோரியுள்ளனர்.

சம்பவ இடத்தில் நின்றிருந்த விமானம் ஒன்றில் தீப்பிழம்புகளும் புகையும் எழுந்ததை நேரில் கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யேமனில் நிலவி வந்த மோதல் நிலை மீண்டும் தீவிரமடைந்துள்ள சூழலில்,

சவூதி அரேபியாவின் வான் மற்றும் எரிசக்தி நிலைகளை இலக்கு வைத்து ஹூதி அமைப்பினர் ஆளில்லா விமானங்கள்

மற்றும் ஏவுகணைகள் மூலமான தாக்குதல்களை அண்மைக்காலமாக தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin