தென் கொரிய அரசின் E-9 திட்டத்தின் கீழ் மேலும் 188 இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு!

தென் கொரிய அரசின் E-9 திட்டத்தின் கீழ் மேலும் 188 இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு!

தென் கொரிய அரசின் E-9 திட்டத்தின் கீழ், உற்பத்தி, மீன்பிடி மற்றும் சேவைத் துறைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 188 இலங்கைத் தொழிலாளர்கள் ஒக்டோபர் 11ஆம் திகதி தென் கொரியா புறப்படவுள்ளனர்.

 

இவர்களுக்கான இறுதி வழிகாட்டல் நிகழ்ச்சி ஒக்டோபர் 6 ஆம் திகதி வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்றது. இதில் கொரிய EPS மைய இயக்குநர் லீ ஹ்யே-வோன் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகப் பொது முகாமையாளர் எஸ்.எம்.எஸ்.டி. குணசிங்க பங்கேற்றனர்.

 

அரசுகளுக்கு இடையிலான (G2G) ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை இளைஞர்களுக்குக் கொரியாவில் பாதுகாப்பான பணி வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

Recommended For You

About the Author: admin