யாழ் வந்த ஜனாதிபதி ஒரு துண்டு காணியேனும் விடுவிக்கவில்லை: மக்கள் விடுதலை

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாத மக்களின் வரிப்பணத்தை வீணடித்த வெற்றுபயணமாகவே அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெந்தி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யுத்தத்தில்... Read more »

பூநகரி அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தை மேம்படுத்தும் முகமாக வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். அவற்றின் அடிப்படையில் 10 பீடங்களாக உருவாக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே... Read more »
Ad Widget

திருகோணமலையில் படகுப் போட்டி

பொங்கல் விழாவை முன்னிட்டு திருகோணமலை கன்னியா கடற்கரையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் மாபெரும் படகுப் போட்டி இடம்பெற்றது. தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு இலங்கை வரலாறறில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் திருகோணமலை சம்பூரி... Read more »

வர்த்தகர் பிரச்சினைகளுக்கு இரண்டு மாதங்களில் தீர்வு: ரணில்

வடமாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் எதிர்வரும் 02 வாரங்களில் வடக்கிற்கு விஜயம் செய்து இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும், வடமாகாண வர்த்தக சமூகத்தினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு... Read more »

விமான நிலையத்தில் முக அடையாளம் காணும் அமைப்பு

நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அல்லது நாட்டிற்கு வரும் குற்றவாளிகளை அடையாளம் காண பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இதனை பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் இன்று திறந்து வைத்தார். கடந்த காலங்களில்... Read more »

மாலைத்தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மாலைதீவில் சற்று முன்னர் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. மாலைத்தீவுக்கு மேற்கே 896 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்க மையம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. Read more »

இலங்கை அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 279 ஓட்டங்கள் குவிப்பு

சுற்றுலா சிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் சிம்பாவே அணிக்கு 274 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி, இலங்கை அணி... Read more »

இலங்கை வரும் ஜப்பான் நிதி அமைச்சர் : இலகு ரயில் திட்டம் குறித்து ஆலோசனை

ஜப்பான் நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி அடுத்தவாரம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி எம்.பெரேரா மற்றும் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி ஆகியோருக்கு இடையில் டோக்கியோவில் உள்ள நிதியமைச்சில் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த விஜயம் உறுதிப்படுத்தப்பட்டது. எதிர்வரும் 11... Read more »

வேட்பாளர் தேர்வில் போட்டியிட தடை: டிரம்ப்பின் மேல்முறையீடு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கொலராடோ நீதிமன்றத் தடைக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது. இந்த மனுவை விரைந்து விசாரிக்குமாறு நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பெப்ரவரி 8ஆம் திகதி வாய்மொழி வாக்குவாதம்... Read more »

சஜித்தை ரணிலின் பாதையில் அழைத்து செல்ல முயற்சி

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு பின்பற்ற செய்யும் தவறான செயற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். ”தமதும் சஜித் பிரேமதாசவின் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றே. ரணில் மற்றும் சஜித்தின்... Read more »