பொங்கல் விழாவை முன்னிட்டு திருகோணமலை கன்னியா கடற்கரையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் மாபெரும் படகுப் போட்டி இடம்பெற்றது.
தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு இலங்கை வரலாறறில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் திருகோணமலை சம்பூரி இன்று காலை நடைபெற்றது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்கொண்டனர்.
அத்துடன், தென்னிந்தியா உட்பட உலகில் பல நாடுகளில் இருந்தும் விசேட அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
அதன் ஒருகட்டமாக பிற்பகல் படகுப் போட்டி இடம்பெற்றது. இந்த போட்டியில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஏராளமான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மாபெரும் பொங்கல் கொண்டாட்டமாக இந்த நிகழ்வுகள் பார்க்கப்படுகிறது.