அரச ஊழியர்களும் நாளை பணியிடங்களுக்கு சமூகமளிக்க வேண்டும்

புது வருட பிறப்பான நாளை, அனைத்து அரச ஊழியர்களும் பங்கேற்புடன் உத்தியோகபூர்வ விழாவை தமது பணியிடங்களில் நடத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இதன் பிரதான உத்தியோகபூர்வ வைபவம் நாளை முற்பகல் 09.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் ஜனாதிபதி... Read more »

மேலும் ஒரு கைதி உயிரிழப்பு : பலர் தீவிர சிகிச்சை பிரிவில்

மாத்தறை சிறைச்சாலையில் மற்றொரு கைதியும் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மாத்தறை சிறைச்சாலை கைதிகள் மத்தியில் பரவிய மர்ம நோயினால் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிறைச்சாலை கைதிகள் மத்தியில் மூளை காய்ச்சல் பரவிவருவதாக சிறைச்சாலை தகவல்கள் அண்மையில்... Read more »
Ad Widget

வேலைவாய்ப்பை நிராகரித்தால் கொடுப்பனவுகள் இல்லை!

நிரந்தர வேலைவாய்ப்பை நிராகரித்தால், அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது எனும் புதிய சட்டம் இந்த புதிய ஆண்டில் நடைமுறைக்கு வருகிறது. மாதாந்த கொடுப்பவுகள் பெறும் வேலை தேடும் ஒருவர்,12 மாத இடைவெளியில் முதலாவது நிரந்தர வேலை வாய்ப்பினை மட்டுமே நிராகரிக்க முடியும். அவருடைய தகமைக்கு... Read more »

புத்தளத்தில் கோர விபத்து 09 பேர் படுகாயம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 09 பேர் காயமடைந்துள்ளனர். புத்தளம் பகுதியில் இருந்து கொழும்பு திசை நோக்கிச் சென்ற காரும், நீர்கொழும்பு பகுதியில் இருந்து புத்தளம் திசை நோக்கிப் பயணம்... Read more »

யாழ் மந்திரிமனையை ஓவியமாக வரைந்து அசத்திய இளம் பெண்!

யாழ். பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் ஆலய பகுதியில் அமைந்துள்ள அரசர் காலத்தில் உருவாக்கப்பட்ட கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் தான் இந்த மந்திரி மனை. குறித்த மந்திரி மனை இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின்... Read more »

இலங்கை தமிழருக்கு பிரித்தானியாவின் உயரிய விருது அறிவிப்பு

பொருட்களின் இருப்பிடத்தை அறிவதற்கான மிகவும் மலிவான புதிய மின்னணு பொறிமுறை ஒன்றைக் கண்டுபிடித்த இலங்கை தமிழரான சபேசன் சிதம்பரநாதனுக்கு பிரித்தானியாவின் King’s New Year Honors விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி சபேசன் சிதம்பரநாதன், தேசிய சுகாதார சேவை அறக்கட்டளைகள், வைத்தியசாலைகள், விமான உற்பத்தி நிறுவனங்கள்... Read more »

பாதுகாப்பை பலப்படுத்திய பிரான்ஸ்

பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் நடுவே தீவிரவாத அச்சுறுத்தலுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார். “பிரான்ஸ் முழுவதும் 90,000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த இருப்பதாகவும், பாரிஸ் நகரில் மட்டும் 6,000... Read more »

44 இலங்கை கைதிகளுக்கு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் பொது மன்னிப்பு

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் (UAE) தேசிய தினத்தை முன்னிட்டு அங்குள்ள வெவ்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 02ஆம் திகதி அனுசரிக்கப்பட்ட ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் 52வது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கை கைதிகளுக்கு பொது மன்னிப்பு... Read more »

விசா விண்ணப்ப முறையை எளிதாக்கும் சீனா

ஜனவரி முதலாம் திகதி முதல், அமெரிக்க சுற்றுப்பயணிகளுக்கான விசா விண்ணப்ப முறையை சீனா எளிதாக்க உள்ளது. அதன்படி தேவையான ஆவணங்கள் குறைக்கப்படும் என்று வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டது. கொவிட்-19 தொற்று பரவலின்போது ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, பயணத்துறையை மீட்கவும், அதன்... Read more »

ரணில் சிறந்த உலகத் தலைவராம் என்கிறார் வஜிர

“அமெரிக்கா, ரஷ்யா என்பன பெரிய நாடுகளாக இருக்கலாம். ஆனால் புடின், ஜோ பைடன் ஆகியோரை விடவும் சிறந்த தலைவர்தான் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவரால் மட்டுமே இலங்கைக்குப் பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற... Read more »