ஜனவரி முதலாம் திகதி முதல், அமெரிக்க சுற்றுப்பயணிகளுக்கான விசா விண்ணப்ப முறையை சீனா எளிதாக்க உள்ளது.
அதன்படி தேவையான ஆவணங்கள் குறைக்கப்படும் என்று வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 தொற்று பரவலின்போது ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, பயணத்துறையை மீட்கவும், அதன் பொருளியலை வலுப்படுத்தவும் சீனா அண்மை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சுற்றுப்பயண விசா விண்ணப்பதாரர்கள் இனி விமான நுழைவுச் சீட்டுப் பதிவுகள், ஹோட்டல் பதிவுகள், அழைப்புக் கடிதம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கவேண்டியது இல்லை என்று தூதரகத்தின் அறிக்கை தெரிவித்தது.
முன்னதாக, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பேன், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து விசா இன்றி சீனாவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
விசா இன்றி சீனாவுக்குச் செல்லும் நடைமுறை 12 மாதங்களுக்குத் தொடரும். அந்த ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சீனாவில் 15 நாள்கள் வரை தங்கி இருக்கலாம்.
கடந்த நவம்பரில் விசா இல்லாமல் பயணம் செய்யும் தனது கொள்கையை சீனா 54 நாடுகளுக்கு விரிவுபடுத்தியது