நெருக்கடியில் இருந்து மீண்ட இலங்கைப் பொருளாதாரம் – உலக வங்கி அறிவிப்பு

நெருக்கடியில் இருந்து மீண்ட இலங்கைப் பொருளாதாரம் – உலக வங்கி அறிவிப்பு

உலக வங்கியின் புதிய “Sri Lanka Development Update” அறிக்கையின்படி, 12 காலாண்டுகளாக தொடர்ச்சியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள இலங்கைப் பொருளாதாரம், தற்போது நெருக்கடிக்கு முந்தைய நிலையை மீண்டும் எட்டியுள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.7% வளர்ச்சியடைந்துள்ளதாகவும், முழு ஆண்டில் 4.4% வளர்ச்சி பதிவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. எனினும், குடும்ப வருமானம், வேலைவாய்ப்பு மற்றும் வறுமை நிலைகள் இன்னும் பொருளாதார மீட்சியுடன் இணைந்து முன்னேறவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.

 

வறுமை விகிதம் 16.9% ஆக காணப்படுவதுடன், அது நெருக்கடிக்கு முந்தைய மட்டத்தை விட உயர்வாகவே உள்ளது. பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்த தனியார் முதலீடுகள், ஏற்றுமதிகள் மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாடுகள் அவசியம் என அறிக்கை வலியுறுத்துகிறது.

 

குறிப்பாக வேளாண் வணிகத் துறை வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

Recommended For You

About the Author: admin