துருக்கி – பிரான்ஸ் உதைபந்தாட்ட போட்டியில் காயம் : இடது முழங்கால் தசைநார் நீட்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் கிலியன் எம்பாப்பே!

துருக்கி – பிரான்ஸ் உதைபந்தாட்ட போட்டியில் காயம் : இடது முழங்கால் தசைநார் நீட்சியால் பாதிக்கப்பட்டுள்ளார் கிலியன் எம்பாப்பே!

துருக்கிக்கு எதிரான நேஷன்ஸ் லீக் (Ligue des nations) கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் அணிக்கான ஒரே வெற்றி இலக்கைப் (goal) பதிவு செய்த அணித்தலைவர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappé) முழங்கால் உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.

அவரது இடது முழங்காலில் ‘ஹைப்பர் எக்ஸ்டென்ஷன்’ (hyperextension – அதீத நீட்சி) ஏற்பட்டுள்ளதை அவரது கழகமான ரியல் மாட்ரிட் (Real Madrid) இன்று சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

மைதானத்தின் மோசமான நிலையும் புதிய சப்பாத்துகளும்

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘ஒன்’ (On) நிறுவனத்துடனான தனது புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், அவர்களின் புதிய மாதிரி (prototype) கால்பந்துச் சப்பாத்துக்களை அணிந்து வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 25) எம்பாப்பே களமிறங்கியிருந்தார்.

துருக்கியின் இஸ்மிட் (Izmit) நகர மைதானத்தின் மோசமான புல்வெளியில், போட்டியின் 54 ஆவது நிமிடத்தில் பந்தை உதைத்து இலக்கைப் பதிவு செய்தபோதே அவர் உபாதைக்கு உள்ளானார்.

போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் சினடின் சிடான் (Zinédine Zidane), முழங்கால் உபாதை காரணமாக எம்பாப்பே அணியிலிருந்து விலகித் தனது கழகத்திற்குத் திரும்பியுள்ளதாக அறிவித்தார்.

“எங்கள் மருத்துவக் குழுவினர் மேற்கொண்ட பரிசோதனைகளின் முடிவில், எம்பாப்பேயின் இடது முழங்காலின் பின்பக்க உறையில் (capsule postérieure) அதீத நீட்சி ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என ரியல் மாட்ரிட் கழகம் தனது அலுவல்முறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவர் எவ்வளவு காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்பதை மாட்ரிட் நிருவாகம் உத்தியோகபூர்வமாக அறிவிக்காத போதிலும், அவர் பல வாரங்கள் களத்திலிருந்து விலகியிருக்க நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது முக்கிய வீரரின் விடயத்தில் “எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ள விரும்பவில்லை” எனப் பயிற்சியாளர் சிடான் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அணியிலும் உலகக் கிண்ண வரலாற்றிலும் அதிக இலக்குகளைப் பதிவு செய்துள்ள சாதனையாளரான எம்பாப்பே இல்லாமல், அடுத்த மூன்று நேஷன்ஸ் லீக் போட்டிகளிலும் பிரான்ஸ் விளையாடவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை பெல்ஜியத்திற்கு எதிரான வெளிநாட்டுப் போட்டியிலும், ஒக்டோபர் 2 மற்றும் 5 ஆம் திகதிகளில் முறையே இத்தாலி மற்றும் பெல்ஜியத்திற்கு எதிராகத் தமது சொந்த மைதானமான ‘ஸ்ரட் து பிரான்ஸில்’ (Stade de France) நடைபெறவுள்ள போட்டிகளிலும் பிரான்ஸ் அணி களமிறங்கவுள்ளது.

உபாதைகள் காரணமாக ஏற்கெனவே பல மாற்றங்களைச் செய்துள்ள சிடான், தற்போது எம்பாப்பேயிற்குப் பதிலாக வேறு எந்தவொரு வீரரையும் அழைக்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதால், பிரான்ஸ் அணி 22 வீரர்களுடன் மட்டுமே இந்தப் போட்டிகளை எதிர்கொள்ளவுள்ளது.

Recommended For You

About the Author: admin