தீஸ்தா ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானை… உயிரைக் காப்பாற்றிய மீனவர்கள்!
மேற்கு வங்காளத்தில் நடந்த இந்த சம்பவம் பலரது மனதையும் நெகிழச் செய்துள்ளது.
பலத்த நீரோட்டத்தில் சிக்கிய ஒரு யானைக் குட்டி, தீஸ்தா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு இருந்த உள்ளூர் மீனவர்கள் குட்டி யானையை கவனித்தனர்.
அதன்பிறகு, வேகமாக ஓடிய ஆற்றின் நீரோட்டத்திலும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் அதைத் தொடர்ந்து சென்று, இறுதியில் குட்டி யானையை தங்களது படகில் பாதுகாப்பாக ஏற்றினர்.
பின்னர் அது வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதன் பிறகு நடந்ததுதான் இந்தக் கதையின் அழகான முடிவு…
குட்டி யானை மீண்டும் தனது தாய் யானையுடன் சேர்க்கப்பட்டது.
ஒரு உயிர் ஆபத்தில் இருந்தபோது, அதை காப்பாற்ற மனிதர்கள் எடுத்த அந்த முயற்சி…
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான கருணைக்கு ஒரு அழகான உதாரணம்.

