ஜப்பான், ஜெர்மனியைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் குறையும் மக்கள்தொகை !!

ஜப்பான், ஜெர்மனியைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் குறையும் மக்கள்தொகை !!

வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருக்கும் துறைகள்!

அவுஸ்திரேலியாவின் மக்கள்தொகை எதிர்காலத்தில் சுருங்கிவிடும் என்று அந்நாட்டு அரசாங்கம் தீவிரக் கவலை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, வரவிருக்கும் 2060-களின் முற்பகுதியில் பிறப்பு எண்ணிக்கையைக் காட்டிலும் மரணங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அவுஸ்திரேலிய வரலாற்றில் இந்த நிலை ஏற்படுவது இதுவே முதல்முறை என்பதால், இது தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.

 

இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியக் கருவூலத்துறை அடுத்த 40 ஆண்டுக்கான எதிர்காலத் திட்டங்கள் அடங்கிய ‘தலைமுறைகளுக்கு இடையிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 

செயற்கை நுண்ணறிவு (AI), உலகளாவிய நெருக்கடிகள் மற்றும் மக்கள்தொகை மூப்படைதல் போன்ற முக்கிய சவால்களை இந்த அறிக்கை ஆழமாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

 

பல ஆண்டுகளாக அவுஸ்திரேலியா தனது குறைந்த பிறப்பு விகிதத்தைச் சமாளிப்பதற்காக வெளிநாட்டு குடியேற்றங்களையே பெரிதும் நம்பியிருந்தது.

 

ஆனால், தற்போது குடியேற்ற நடவடிக்கைகளும் படிப்படியாக மெதுவடைந்து வருவது அரசாங்கத்திற்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஏற்கனவே ஜப்பான், ஜெர்மனி மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் பிறப்புகளை விட இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில்,

 

அவுஸ்திரேலியாவும் தற்போது அதே பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

மக்கள்தொகை வயதாகிக் கொண்டே போவதால், எதிர்காலத்தில் மூத்தோர் பராமரிப்புச் சேவைகளுக்கான தேவை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதேவேளையில், வயதான மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சுகாதாரத்துறை மற்றும் மூத்தோர் பராமரிப்புத் துறைகளில் கடுமையான ஊழியர் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அறிக்கை எச்சரித்துள்ளது.

 

ஏனெனில், இந்த முக்கியமான துறைகள் அனைத்தும் தங்களது தேவைகளுக்காக வெளிநாட்டு ஊழியர்களை மட்டுமே பெருமளவில் நம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin