இஸ்ரேலிய ட்ரோன் இயந்திரத் தொழிற்சாலையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்!
இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையரில் அமைந்துள்ள எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் UAV என்ஜின்ஸ்
தொழிற்சாலையை ஒன்பது பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
காசாவில் பயன்படுத்தப்படும் இஸ்ரேலின் ட்ரோன் தொகுப்பில் சுமார் 85 சதவீதத்தை எல்பிட் நிறுவனமே உற்பத்தி செய்யும் நிலையில்,
இஸ்ரேலிய இராணுவ ட்ரோன்களுக்கு எஞ்சின்களை தயாரித்து வழங்கும் இத்தொழிற்சாலையின்
உற்பத்தியைத் தடுக்கும் நோக்கில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

