சிறைக்காவலில் உள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டில் தயாரித்த உணவு பெற அனுமதி!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு வீட்டில் தயாரிக்கப்படும் உணவை எடுத்துச் செல்ல சிறைச்சாலைத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை வார்டை சுற்றி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக்க பல்லேதென்ன தெரிவித்தார்.
மேலும், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு காரணங்களுக்காக அவரைச் சந்திப்பதற்கு நாள் ஒன்றுக்கு 3 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

