செப்டம்பர் 15 முதல் தாய்லாந்து பயணத்திற்கு இலங்கையர்களுக்கு E-Visa கட்டாயம்!

செப்டம்பர் 15 முதல் தாய்லாந்து பயணத்திற்கு இலங்கையர்களுக்கு E-Visa கட்டாயம்!

தாய்லாந்திற்கு பயணம் செய்யும் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

தாய்லாந்து அரசாங்கத்தின் புதிய தீர்மானத்தின்படி, எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் இலங்கையர்கள் விசா இன்றி தாய்லாந்திற்குள் பிரவேசிக்கும் நடைமுறை நிறுத்தப்படவுள்ளது.

 

ஆகஸ்ட் 31ஆம் திகதி தாய்லாந்து வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில், இலங்கை உள்ளிட்ட 21 நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த விசா இல்லா நுழைவு அனுமதி இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக, செப்டம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் தாய்லாந்திற்கு பயணம் செய்ய விரும்பும் இலங்கையர்கள், இணையவழி E-Visa முறையின் மூலம் முன்கூட்டியே விசா பெற்றிருக்க வேண்டும். மேலும், கொழும்பிலுள்ள தாய்லாந்து தூதரகம் நேரடி விசா விண்ணப்பங்களை ஏற்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேவேளை, செப்டம்பர் 14ஆம் திகதிக்கு முன்னர் தாய்லாந்திற்குள் நுழையும் இலங்கைப் பயணிகள், தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின் அடிப்படையில் 60 நாட்கள் வரை தங்கியிருக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin