புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகள் வழங்க நடவடிக்கை!

புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகள் வழங்க நடவடிக்கை!

புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு, பதிவு செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 

ஜூன் 10 முதல் ஓகஸ்ட் 31 வரை பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் தயாரிப்பு முடிவடைந்துள்ளதாகவும், இனி விநியோகம் விரைவுபடுத்தப்படும் என்றும் கூறினார்.

 

மேலும், மின்சார வாகனங்களை (EV) பொலிஸார் இலகுவாக அடையாளம் காணும் வகையில், அவற்றிற்கு முன் மற்றும் பின் பக்கங்களில் பச்சை நிற இலக்கத் தகடுகள் வழங்கப்படும்.

 

ஏனைய வாகனங்களுக்கு முன்பக்கம் வெள்ளையும், பின்பக்கம் மஞ்சளும் வழங்கப்படும். அத்துடன் 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் நிலுவையிலுள்ள இலக்கத் தகடுகள் அனைத்தும் அடுத்த 6 மாதங்களுக்குள் வழங்கி முடிக்கப்படும்.

Recommended For You

About the Author: admin