தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் மறுமதிப்பீட்டு விண்ணப்பங்கள் இன்று முதல் ஆரம்பம்!
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (07) முதல் செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை ஒன்லைனில் (Online) மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை அதிபர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான onlineexams.gov.lk மூலம் ‘SCHOOL LOGIN’ பகுதி ஊடாக இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தரம் 6 வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களையும் பாடசாலை அதிபர்கள் ஊடாக ஒன்லைனில் சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

