மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட அம்பிட்டியே சுமனரதன தேரர்!
மட்டக்களப்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய அம்பிட்டியே சுமனரதன தேரர், நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுமனரதன தேரரை, செப்டம்பர் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

