ரஷ்யா – இலங்கை இடையேயான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

ரஷ்யா – இலங்கை இடையேயான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

ரஷ்யா – இலங்கை இடையேயான நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க அஸூர் எயார் (Azur Air) விமான நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, ரஷ்யாவின் 5 பிரதான விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கான விமானச் சேவைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அஸூர் எயார் நிறுவனத்திற்கு மேலதிகமாக, எரோஃப்ளோட் (Aeroflot) மற்றும் எஸ் செவன் (S7) ஆகிய விமான நிறுவனங்களும் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. இத்துறைசார் நடவடிக்கைகள் நாட்டின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு பெரும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin