பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை!

மகளிர் ஆசியக் கோப்பை: பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இலங்கை

மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடரின் விறுவிறுப்பான போட்டியில் பங்களாதேஷ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

 

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி, இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

115 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை மகளிர் அணி, பதற்றமான தருணத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. .

 

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Recommended For You

About the Author: admin