இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம் – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இரத்து!

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம் – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இரத்து!

இந்தோனேசியாவில் உள்ள அனாக் க்ரக்கடாவ் (Mount Anak Krakatau) எரிமலை வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட அடர்ந்த சாம்பல் மேகங்கள் காரணமாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரு விமானச் சேவைகள் இன்று (07) இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

 

அதற்கமைய கொழும்பிலிருந்து ஜகார்த்தா நோக்கிய UL 364 மற்றும் ஜகார்த்தாவிலிருந்து கொழும்பு நோக்கிய UL 365 ஆகிய விமானப் பயணங்களே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

 

எரிமலைச் சாம்பல் பரவியுள்ளதால், இந்தோனேசியாவின் ஜகார்த்தா பிரதான சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல விமான நிலையங்களின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

 

பயணிகள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin