அமெரிக்க இராணுவச் செயலாளர் பதவி விலகல்!!

அமெரிக்க இராணுவச் செயலாளர் பதவி விலகல்!!

பாதுகாப்புச் செயலாளருடன் ஏற்பட்ட மோதலே காரணமா?

அமெரிக்க இராணுவச் செயலாளராக (US Army Secretary) சுமார் 18 மாதங்கள் பணியாற்றிய நிலையில்,

டான் ட்ரிஸ்கால் (Dan Driscoll) தனது பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மற்றும் டான் ட்ரிஸ்கால் ஆகியோருக்கு இடையே கடந்த பல மாதங்களாக

 

நீடித்து வந்த கடுமையான கருத்து முரண்பாடுகளே இவ் அதிரடிப் பதவி விலகலுக்கு முதன்மைக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்க வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் இராணுவச் செயலாளராகப் பொறுப்பேற்ற 41 வயதான டான் ட்ரிஸ்கால்,

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ‘ட்ரோன் மனிதர்’ (Drone guy) எனப் பரவலாக அழைக்கப்பட்டார்.

 

இவர் ஜனாதிபதியின் பாதுகாப்புத் திட்டங்களை முன்னெடுப்பதில் திறம்படச் செயற்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

 

2025 ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் இராணுவச் செயலாளர் ட்ரிஸ்கால் ஆகியோருக்கு இடையே பல்வேறு நிர்வாக மற்றும்

 

இராணுவ விவகாரங்களில் தீவிர முரண்பாடுகள் நிலவி வந்தன. கடந்த ஏப்ரல் மாதம் கடற்படைச் செயலாளர் ஜோன் பெலன் (John Phelan) திடீரெனப் பதவி விலகியதைத் தொடர்ந்து, தற்போது இராணுவச் செயலாளரும் விலகியுள்ளார்.

 

மேலும், இராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜோர்ஜ், ஜெனரல் டேவிட் ஹோட்னே மற்றும் மேஜர் ஜெனரல் வில்லியம்

 

கிரீன் உள்ளிட்ட பல உயர்மட்டத் தளபதிகள் அண்மைய மாதங்களில் பதவி விலகியுள்ளனர் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

பென்டகன் தலைவராகப் பொறுப்பேற்றது முதல், கடற்படை நடவடிக்கைகளுக்கான பிரதானி மற்றும் விமானப்படையின் பிரதிப் பிரதானி உட்பட 12 இற்கும் மேற்பட்ட சிரேஷ்ட இராணுவ

 

அதிகாரிகளைப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்துள்ளார்.

Recommended For You

About the Author: admin