மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யச் சரியான வீதிப் போக்குவரத்து நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல் ! 

புதிய கல்வியாண்டு: மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யச் சரியான வீதிப் போக்குவரத்து நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல் !

புதிய கல்வியாண்டு ஆரம்பமாகியுள்ள நிலையில், வீடுகளிலிருந்து பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பின்பற்ற வேண்டிய முக்கிய நடைமுறைகளை ‘தார்ன்-எ-கரோன்’ (Tarn-et-Garonne) மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது.

கால்நடையாக செல்லும் போது …

சிறிய வயதுப் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லும்போது, ஆரம்ப நாட்களில் அவர்களைப் பெற்றோரே அழைத்துச் செல்வது பரிந்துரைக்கப்படுகின்றது.

இதன்போது வீதியைக் கடப்பதற்கான (Traverser la chaussée) அடிப்படைப் பாதுகாப்பு விதிகளை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். அத்துடன் வீதிகலீல் அல்லது நாடி பாதைகளில் ஓடி விளையாடாமல் அமைதியாக நடந்து செல்ல அறிவுறுத்தவேண்டும் .

மேலும், விபத்து அபாயமுள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறியும் வகையில், வீட்டிலிருந்து பாடசாலைக்கான பயணப் பாதையைப் பிள்ளைகளுடன் இணைந்து பெற்றோர் முன்கூட்டியே ஆராய்வது சிறந்ததாகும்.

மிதிவண்டி அல்லது பலகை உருளிகளில் செல்பவர்கள் …

தலைக்கவசம் (Casque) உள்ளிட்ட தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை அணிவது கட்டாயமாகும்.

பாடசாலை வளாகங்களுக்கு அருகிலும், வாகன நெரிசல் அதிகமுள்ள பகுதிகளிலும் (Circulation dense) கூடுதல் அவதானத்துடன் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தவேண்டும் .அதேபோல மிதிவண்டி ,உந்துருளி ,பலகை உருளி எனபேரில் செல்லும் பொது மக்களும் பாடசாலை உள்ள இடங்களில் மெதுவாகவும் அவதானமாகவும் செல்லவேண்டும்

மகிழுந்துகளில் பயணிக்கும் போது (En voiture)

மகிழுந்துகளில் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அழைத்து செல்லு பெற்றோரும் பாடசாலை நேர ஒழுங்கை கவனித்து நடக்கவேண்டும் .இறுதி நிமிடத்தில் அவசர அவசரமாக புறப்பட்டால் விபத்துகள் நடைபெற சாத்தியமுள்ளது .

அதே போல வாகனச் சாரதிகளும் தமது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, வேகக் கட்டுப்பாடுகளை (Limitations de vitesse) மதிக்க வேண்டும்.

குறிப்பாகக் காலை 8:00 மணி மற்றும் மாலை17:00 மணி அளவிலான பாடசாலை தொடங்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களில், பாடசாலைகளுக்கு அருகே சாரதிகள் அதீத கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.

பாடசாலைப் போக்குவரத்துச் சேவைகளில் (En transport scolaire)

பாடசாலைப் பேருந்துகளில் ஏறும்போதும் இறங்கும்போதும், அத்துடன் பயணத்தின்போதும் மாணவர்கள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும்.ஓடிச் சென்று ஏறுதல் ,சண்டை பிடித்தல் ,குறும்புகள் செய்தல் (தள்ளி விடுதல் ,இழுத்து விழுத்துதல் ,வாய் தர்க்கம் ,கேலி செய்தல் ) என்பவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்

கூட்டு விழிப்புணர்வும் அனைவரினதும் பொறுப்பும் (Une vigilance collective)

புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதால், பாடசாலைகளுக்கு அருகாமையில் மக்களின் நடமாட்டம் அதிகரிப்பதுடன், பாதசாரிகள், மிதிவண்டிச் சாரதிகள் மற்றும் ஏனைய வாகனச் சாரதிகள் எனப் பலரும் ஒரே வீதியைப் பகிர வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

மாணவர்களின் பாதுகாப்பு என்பது பொதுமக்களாகிய அனைவரினதும் விழிப்புணர்விலேயே தங்கியுள்ளது.

பாடசாலைப் பகுதிகளில் வேகத்தைக் குறைத்தல், மிகவும் விழிப்புடன் இருத்தல் மற்றும் ஏனைய வீதிப் பயனாளர்களை மதித்து நடத்தல் ஆகியவையே அனைவருக்குமான பாதுகாப்பான பயணங்களை உறுதிசெய்யும் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin