சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி மிக விமரிசையாகத் தொடங்கியது!

சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சி மிக விமரிசையாகத் தொடங்கியது!

இலங்கையின் ரத்தினபுரியில் “Gem City Ratnapura 2026” சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஆகஸ்ட் 31 ஆம் திகதி மிக விமரிசையாகத் தொடங்கியது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையும் (NGJA) இலங்கை இரத்தினக்கல் வியாபாரிகள் சங்கமும் (LGDMA) இணைந்து நடத்தும் இக்கண்காட்சியைத் திறந்து வைத்துப் பேசிய தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, ரத்தினபுரியை சர்வதேச இரத்தினக்கல் வர்த்தகத்தின் முக்கிய மையமாக (Global Hub) மாற்றுவதே அரசின் முதன்மை இலக்கு என்றார்.

அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்வின் மூலம், மதிப்பு கூட்டப்பட்ட ஏற்றுமதி வழியே ஆண்டுக்கு 2 பில்லியன் டொலர் வருவாய் ஈட்டவும், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin