துபாயில் கைது செய்யப்பட்டார் ‘களு மல்லி’

துபாயில் கைது செய்யப்பட்டார் ‘களு மல்லி’ – இலங்கை பொலிஸாரின் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை!

துபாயில் தங்கியிருந்ததாகக் கூறப்படும் துஷான் நெத்சரா என்றழைக்கப்படும் ‘களு மல்லி’ என்பவர் துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைப் பொலிஸார் வழங்கிய புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

‘களு மல்லி’ என அழைக்கப்படும் துஷான் நெத்சரா, ‘தேஹி பேல்’ என அழைக்கப்படும் சேஹான் சத்சர என்பவரின் சகோதரர் என இலங்கை ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சேஹான் சத்சர போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுபவர் எனவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

முன்னதாக, துஷான் நெத்சரா மற்றும் அவரது சகோதரர் வெளிநாட்டில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பை இயக்குவதாக விசாரணைகளில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும் 2025ஆம் ஆண்டு செய்திகள் வெளியாகியிருந்தன.

தற்போதைய கைது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு அழைத்து வரப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended For You

About the Author: admin