கடல் தண்ணீரையே குடிநீராக்கும் மிதக்கும் அதிசயம்!

பிரான்ஸ் பொறியாளர்கள் கொண்டு வந்திருக்கும் ஒரு புது யோசனை இப்போ உலகம் முழுக்க பேசப்படுது. அது என்னன்னா, கடலிலேயே மிதந்துகொண்டு கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றும் ஒரு சிறப்பு கப்பல்.

இதன் பெரிய சிறப்பு என்ன தெரியுமா? இது ஓடுவதற்கு கரண்ட் இணைப்போ, பெட்ரோல் டீசலோ தேவையே இல்லை. முழுக்க முழுக்க சூரிய ஒளியில் மட்டுமே இயங்குது.

☀️ இது எப்படி வேலை செய்யுது?
இந்த கப்பலின் மேல் பகுதி முழுவதும் அதிநவீன சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டிருக்கும். அந்த சூரிய சக்தியை வைத்து, RO எனப்படும் சவ்வூடு பரவல் தொழில்நுட்பம் மூலம் கடல் நீரில் உள்ள உப்பு மற்றும் அழுக்குகளை முழுமையாக நீக்குகிறது.

இதில் இன்னும் சில அசத்தல் வசதிகளும் இருக்கு:
தேவைக்கு ஏற்ப குடிநீர் உற்பத்தியை கூட்டவோ குறைக்கவோ முடியும் வகையில் Modular Design-ல் உருவாக்கியுள்ளனர்.

சுத்திகரிக்கப்படும் தண்ணீரின் தரத்தை உலக சுகாதார நிர்ணயத்தின்படி நொடிக்கு நொடி பரிசோதிக்கும் தானியங்கி கருவிகள் உள்ளன.

இதில் உருவாக்கும் தண்ணீரை கப்பலிலேயே சேமிக்கலாம் அல்லது நேரடியாக கரையில் உள்ள தொட்டிகளுக்கு அனுப்பலாம்.

தண்ணீர் பற்றாக்குறை உள்ள பல இடங்களில் பெரிய தொழிற்சாலை கட்டுவதற்கு இடமோ பணமோ இருக்காது. இது போன்ற நேரத்தில் இந்த நடமாடும் கப்பல் ஒரு வரப்பிரசாதம்.

குறிப்பாக தண்ணீர் இல்லாமல் தவிக்கும் கடலோர கிராமங்கள், சிறிய தீவுகள், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பேரிடர் காலங்களில் இது உடனடியாக கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு குடிநீர் கொடுக்க முடியும்.

வருங்காலத்தில் குடிநீர் பிரச்சனைக்கு இது ஒரு நம்பிக்கையான தீர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Recommended For You

About the Author: admin