நச்சுப் பாம்பு கடித்து பிரெஞ்சு அரசியல்வாதி மருத்துவமனையில் அனுமதி !!

நச்சுப் பாம்பு கடித்து பிரெஞ்சு அரசியல்வாதி மருத்துவமனையில் அனுமதி !!

பாம்புகள் பகுதிகள் குறித்து எச்சரிக்கை

பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான (Manon Aubry, நச்சுப் பாம்பு கடித்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

பாம்பின் நச்சு உடலில் கலந்ததால் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகள் காரணமாக, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாட்கள் இருக்க நேரிட்டது.

 

இடதுசாரி கட்சியான La France Insoumise கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேனன் ஓப்ரி,

 

மருத்துவமனை படுக்கையில் இருக்கும் புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.

 

இந்த வாரம் நான் நினைத்தபடி செல்லவில்லை. ஒரு வைப்பர் பாம்பு என்னைக்கடிக்க நல்ல யோசனை என்று நினைத்து,

 

என்னை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது என்று நகைச்சுவையுடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும் 300-க்கும் குறைவான வைப்பர் பாம்பு கதிப்பு சம்பவங்களே நடப்பதாகவும், அது எனக்கு நடந்துவிட்டது என்றும் அவர் ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.

 

பிரான்சின் பல கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் இந்த வைப்பர் பாம்புகள் காணப்படுகின்றன.

 

ஆஸ்ப் வைப்பர் (Vipera aspis) என்ற வகைப் பாம்புதான் நாட்டில் அதிக அளவில் பரவியுள்ள நச்சுப் பாம்பு ஆகும். இது வறண்ட, பாறை நிறைந்த அல்லது காடு சூழ்ந்த சூழல்களில் வாழும் தன்மையைக் கொண்டது.

 

வானிலை வெதுவெதுப்பாக இருக்கும் போது, குறிப்பாக வெயில் படும் பாறைகள், கல் குவியல்கள்,

 

நீண்ட புல்வெளிகள் மற்றும் மறைவான இடுக்குகளில் இவற்றை அதிகம் காண முடியும். வைப்பர்கள் தங்களைச் சூடேற்றிக் கொள்ள வெளிப்படையான பாறைகளைப் பயன்படுத்துகின்றன.

 

குறிப்பாக, அர்டெச்சே, அவேயிரான், டோர்டோக்னே, ட்ரோமே, ஹவுட்-கோர்ஸ், ஹவுட்-லாயர், ஹவுட்ஸ்-ஆல்ப்ஸ், ஐசெரே, லாட் மற்றும் வார் ஆகிய 10 துறைகளில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

இருப்பினும், பாம்பைக் கண்டாலே ஆபத்து என்று அர்த்தமல்ல. பாம்புகள் பொதுவாக மனிதர்களைத் தவிர்த்துவிடும்.

 

எதிர்பாராதவிதமாக அவற்றின் மீது கால் வைக்கும்போதோ அல்லது தொடும்போதோ மட்டுமே அவை கடிக்கின்றன.

 

“பாம்பு மக்களைத் தாக்குவதில்லை. தன்னைத் தற்காத்துக் கொள்ள மட்டுமே அது கடிக்கிறது” என்று வெர்கோர்ஸ் இயற்கை பூங்காவின் பூங்கா காவலர் ஜீன் ஆண்ட்ரியூஸ் தெரிவித்துள்ளார்.

 

வைப்பர் பாம்பைச் சந்தித்தால் என்ன செய்வது?

தூரத்தைப் பராமரியுங்கள்: பாம்பு கண்ணில் பட்டால் பாதுகாப்பான தூரத்தில் சுற்றிச் செல்வதே சிறந்த வழியாகும்.

 

அதிர்வுகளை உணரச் செய்யுங்கள்: பாம்புகள் அதிர்வுகளுக்கு மிகவும் உணர்திறன் கொண்டவை.

 

நீங்கள் அருகில் செல்வதை அவை உணர்ந்து விலகிச் செல்லும். சந்தக்கமாக இருந்தால் உங்கள் காலால் தரையில் மிதிப்பதன் மூலம் உங்கள் இருப்பை உணர்த்தலாம்.

 

பாதுகாப்பான நடைபயிற்சி: மலையேறுபவர்கள் வெயில் படும் பாறைகள் மற்றும் கல் குவியல்களுக்கு அருகில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

நீண்ட புல்வெளிகளில் நடப்பதைத் தவிர்த்து, உறுதியான, மூடப்பட்ட காலணிகளை அணியலாம்.

 

பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

பிரான்சில் பாம்பு கடியால் மரணம் நிகழ்வது மிகவும் அரிது (ஆண்டுக்கு சராசரியாக ஒன்றுக்கும் குறைவு). பாம்புகள் கடித்தாலும் பெரும்பாலானவை ‘உலர் கடி’யாகவே இருக்கும், அதாவது பாம்பு கடித்துவிட்டாலும் நஞ்சைச் செலுத்தாது.

 

ஒருவேளை நச்சு செலுத்தப்பட்டு பாதிப்பு ஏற்பட்டால்:

 

பாதிக்கப்பட்ட நபர் அமைதியாக இருக்க வேண்டும் மற்றும் அவசர உதவிக்கு அழைக்க வேண்டும்.

 

பாதிக்கப்பட்ட உறுப்பை அசைக்காமல் வைக்க வேண்டும். வீக்கம் ஏற்பட்டால் மோதிரங்கள் அல்லது கடிகாரங்களை அகற்ற வேண்டும்.

 

செய்யக்கூடாதவை: காயத்தை வெட்டுவதோ, நஞ்சை உறிஞ்சுவதோ அல்லது இருக்கமாக கட்டுவதோ கூடாது. அவசர மருத்துவக் குழுக்கள் நஞ்சின் தீவிரத்தை மதிப்பிட்டு எதிர்நஞ்சு உள்ளிட்ட சிகிச்சைகளை வழங்கும்.

 

பிரான்சில் வைப்பர் பாம்புகள் பாதுகாக்கப்பட்ட இனங்கள் என்பதால், அவற்றை ஒருபோதும் கொல்லவோ அல்லது திட்டமிட்டு நகர்த்தவோ கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin