டொனால்ட் ட்ரம்ப் 2026-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2026-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு (Nobel Peace Prize) அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தவும், மோதல்களைத் தீர்க்கவும்
அவர் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜதந்திர முயற்சிகளைப் பாராட்டி இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அமைதியை நிலைநாட்டவும், உலகப் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை உருவாக்கவும் ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகள் இதற்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
முன்னதாக, பல்வேறு உலகத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அமைதிக்கான
நோபல் பரிசுக்கு டொனால்ட் ட்ரம்பின் பெயரை முன்மொழிந்து பரிந்துரைகளை அனுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

