லா கூர்நெவ் தீவிபத்தில் தமிழ் இளைஞர் உயிரிழப்பு !

லா கூர்நெவ் தீவிபத்தில் தமிழ் இளைஞர் உயிரிழப்பு !

இல் து பிரான்சு மாணவர் போராட்டத்தில் இலங்கைத் தமிழ் சிறுவன் உயிரிழந்ததாகப் பரவும் செய்தி: வதந்திகளை நம்பவேண்டாம்!

இல் து பிரான்சு (Île-de-France) மாகாணத்தில் தற்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களில் இலங்கைத் தமிழ் சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான வதந்தியாகும்.

 

கடந்த செப்டெம்பர் மாத இறுதி முதல், ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறைகளில் அதிகரித்துள்ள மாணவர் நெரிசல் மற்றும் உட்கட்டமைப்பு வசதியின்மை

 

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து உயர்தரப் பள்ளி மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டங்களின் போது காவல்துறையினருக்கும்

 

மாணவர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்களும், வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இல் து பிரான்சு மாகாணத்தில் சுமார் இரண்டாயிரம் பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இச்சம்பவங்களில் சில மாணவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளதே தவிர, எவ்வித உயிரிழப்புகளும் இதுவரை ஏற்படவில்லை என்பதனை பிரெஞ்சு உள்துறை மற்றும் கல்வி அமைச்சகங்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.

 

எந்தவொரு நம்பகமான பிரெஞ்சு ஊடகங்களோ அல்லது அரச அதிகாரபூர்வ அமைப்புகளோ உறுதிப்படுத்தாத இத்தகைய செய்திகளைச் சமூக வலைத்தளங்களில் பகிருவதைத் தவிருங்கள் .

 

முக்கிய குறிப்பு : நேற்று ரெக்சன் செல்வராசா என்ற இளைஞர் உறக்கத்தில் இருந்தபோது வீடு தீப்பிடித்து எரிந்து உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

 

அவரது இறப்புக்கும் மாணவர் போராட் டத்துக்கும் தொடர்புள்ளது என்பது உறுதிபடுத்தப்படவில்லை . இது தொடர்பாக பிரெஞ்சு ஊடகங்களில் வெளிவந்த செய்தி …

 

லா கோர்னெவ் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: பத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

 

சென்-சென்-டெனி (Seine-Saint-Denis) மாகாணத்தில் உள்ள லா கோர்னெவ் (La Courneuve) பகுதியில் ஏற்பட்ட கோரத் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) நள்ளிரவு தாண்டி சனிக்கிழமை (அக்டோபர் 3) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக நகர முதல்வர் அலி டியோரா (Aly Diouara) தனது சமூக வலைத்தள அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

நகர முதல்வரின் தகவல்களின்படி, கத்ர் ரூட் (Quatre Routes) பகுதியில் உள்ள கார்சியா வீதியில் (rue Garcia) அமைந்துள்ள தனிவீடொன்றில் (pavillon) அதிகாலை 2:30 மணியளவிலேயே இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

எனினும், தீ பரவியதற்கான துல்லியமான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

 

இவ்விபத்தின் காரணமாகப் பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். அவர்களின் உடல்நிலை குறித்த முழுமையான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. மாற்று இருப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் வரை, பாதிக்கப்பட்ட மக்கள் அப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

“இத்தகையதொரு பேரிடர் காலத்தில் எவரும் தனித்து விடப்படக் கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நகரசபை முழுமையாகச் செயற்பட்டு வருகின்றது” எனத் தெரிவித்த நகர முதல்வர்,

 

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நகரசபையின் சார்பிலும் தனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin