யாழ் செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் ஐம்பதாம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று புதன்கிழமை (12.08.2026) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஐந்து மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஆறு மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, மனிதப் புதைகுழிக்கு அருகில் எழுமாறாகத் தோண்டப்பட்ட இரண்டு சோதனைக் குழிகளிலிருந்தும் இன்றைய தினம் மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

