டொனால்ட் டிரம்பின் 15 அம்ச காசா திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தது!

டொனால்ட் டிரம்பின் 15 அம்ச காசா திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்தது! நெதன்யாகு அறிவிப்பு!

காசாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கீழே போடும் வரை காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் திரும்பப் பெறப்படாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நெதன்யாகு, “போலித்தனமான ஆயுதக் குறைப்புச் செயல்முறைகளை இஸ்ரேல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது”

என்று குறிப்பிட்டார். ஹமாஸ் உண்மையாகவே அனைத்து வகையான கனரக மற்றும் இலகுரக ஆயுதங்களையும் துறக்க வேண்டும் என்றும், அதுவரை இஸ்ரேலிய ராணுவம் தனது படைகளைத் திரும்பப் பெறாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், காசாவிலோ அல்லது மேற்கு கரையிலோ பாலஸ்தீன அரசு உருவாவதை முற்றிலும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ‘அமைதி வாரியம்’ (Board of Peace) மூலம் கடந்த மாதம் இந்த 15 அம்ச அமைதி வரைவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

ஹமாஸ் போன்ற ஆயுதக் குழுக்களைக் கலைத்து, காசாவை மறுசீரமைப்பு செய்து, பாலஸ்தீனக் குழுக்களிடம் நிர்வாகத்தை ஒப்படைப்பது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதற்கிடையில், இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களை முழுமையாக நிறுத்தினால் மட்டுமே ஆயுதங்களை ஒப்படைக்க முடியும் என ஹமாஸ் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin