அமெரிக்கா சென்றுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குக்கு விமான நிலையத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
வியாழக்கிழமை காலை வாஷிங்டன் சென்ற அவரை ஜனாதிபதி டிரம்ப் நேரில் சென்று வரவேற்றார்.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக சீன ஜனாதிபதி ஜி ஷின்பிங்,
வருகையைத் தொடர்ந்து அவருக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்புக்கு டிரம்ப் ஏற்பாடு செய்திருந்தார்.
ஷி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுவான் ஆகியோர் மேரிலாந்து விமானப்படைத் தளத்திற்கு வந்தடைந்தனர்.
அங்கு அவர்களை வரவேற்பதற்காக டிரம்ப்பும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் காத்திருந்தனர்.
சீன ஜனாதிபதிக்கு 100 அடி நீள சிவப்புக் கம்பள மரியாதையும், பீரங்கிப் படை, 21 பேர் கொண்ட மரியாதை அணிவகுப்பு அமெரிக்க,
சீனக் கொடிகளை ஏந்தியவர்கள் மரியாதை அணிவகுப்பு நடத்தினர். வரவேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பி-1 விமானங்களும் விமானப்படைத் தளத்தின் மீது பறந்தன.
இரு நாட்டுத் தலைவர்களும் வர்த்தகம், வரிகள், தொழில்நுட்பம், செய்யறிவு, இராணுவம்,
தைவான், ஈரான் மற்றும் ரஷியா-உக்ரைன் போர் ஆகியவை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
கடந்த 65 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் விமான நிலையத்துக்கே நேரடியாக வந்து வரவேற்பளிப்பது இதுவே முதல்முறை.

