நாங்கள் தீவிரவாதிகள் அல்ல, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்

நாங்கள் தீவிரவாதிகள் அல்ல, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்

ஐ.நா.வில் ட்ரம்புக்கு ஈரான் ஜனாதிபதி பதிலடி

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இன்று (23) உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியான்,

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரித்தார்.

 

சுமார் 18 நிமிடங்கள் இடம்பெற்ற தனது உரையில், “நாங்கள் தீவிரவாதிகள் அல்ல, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்” என அவர் வலியுறுத்தினார்.

 

“அமெரிக்க ஜனாதிபதி எங்களை தீவிரவாதிகள் என்று விவரித்துள்ளார். ஆனால் நாங்கள்தான் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

 

தீவிரவாதிகளைப் பயிற்றுவித்து, பாதுகாப்பு வழங்குபவர்கள்தான் எங்களை தீவிரவாதிகள் என அழைக்கிறார்கள். நாங்கள் செய்ததெல்லாம் எங்களைப் பாதுகாத்துக் கொண்டதுதான்” என பெசேஷ்கியான் தெரிவித்தார்.

 

மேலும், ஈரானிய பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்த தாக்குதல்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளை அவர் கடுமையாக விமர்சித்ததுடன், ஈரான் தனது மக்களைப் பாதுகாக்கும் உரிமையைப் பயன்படுத்தியதாகவும் கூறினார்.

 

“எங்கள் அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தும் தாக்குதல்களுக்கும் ஆக்கிரமிப்பாளர்களின் இலக்குகளுக்கும் ஆளானார்கள்.

 

அதற்கு எதிராக நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொண்டோம்” என அவர் குறிப்பிட்டார்.

 

இந்த உரையின் மூலம், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில்,

 

உலகின் முக்கியமான ராஜதந்திர மேடையான ஐ.நா. பொதுச் சபையில் இருந்து ட்ரம்பின் குற்றச்சாட்டுகளுக்கு பெசேஷ்கியான் நேரடியாக பதிலளித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin