பிரான்சில் அவதானம் ! 

பிரான்சில் அவதானம் !

உங்கள் வங்கிக் கணக்கு எண்ணைக் (IBAN) குறிவைக்கும் புதிய சந்தா மோசடி !

இணையப் பயனாளர்களைக் குறிவைத்து ‘ஃபிஷிங்’ (Phishing) எனப்படும் புதிய இணைய மோசடி வலை பிரான்சில் அதிவேகமாகப் பரவி வருகிறது.

பதிவு செய்யாத ஒரு கற்பனைச் சேவைக்கான “சந்தா உறுதிப்படுத்தல்” என்ற பெயரில் வரும் இந்த மோசடி மின்னஞ்சல்கள் பொதுமக்களின் வங்கிக் கணக்குகளைச் சூறையாடும் நோக்கில் வலம்வருகின்றன.

 

கடந்த ஓகஸ்ட் 1-ஆம் திகதி முதல் ஆயிரக்கணக்கான இணையப் பயனாளர்களுக்கு இந்த மோசடி மின்னஞ்சல்கள்அனுப்பபட்டன .

 

அதில், “Vidéos + Family” என்ற வீடியோ சேவைக்கான ஒரு வருட இலவசப் பயன்பாடு முடிவடைந்துவிட்டதாகவும், இனி ஆண்டுக்கு 49.99 யூரோக்கள் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், அடுத்தகட்டப் பணப் பரிமாற்றத்துக்கு முன்பு இந்தச் சந்தாவை “நிர்வகிக்க, இடைநிறுத்த அல்லது ரத்து செய்ய” (Gérer, suspendre ou résilier) என்று ஒரு இணைய இணைப்பும் அதில் தந்திரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த மோசடியின் மிக ஆபத்தான (Le plus troublant) பகுதி என்னவென்றால், மின்னஞ்சலைப் பெறுபவரின் உண்மையான பெயர், வீட்டு முகவரி மற்றும் மிக முக்கியமாக அவர்களின் வங்கிக் கணக்கு எண் (IBAN) ஆகியவை அதில் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

தங்களின் உண்மையான தரவுகளைக் (Données personnelles authentiques) காணும் பொதுமக்கள், இதுவொரு உண்மையான அதிகாரபூர்வச் சேவை என எளிதில் ஏமாந்து நம்பிவிடுகிறார்கள்.

 

பயனாளர் அந்தச் சந்தாவை ரத்து செய்வதற்காக மின்னஞ்சலில் உள்ள இணைப்பைச் சொடுக்கியவுடன்,

 

அது ஒரு போலியான இணையத்தளத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறது. அங்கு, அந்த 49.99 யூரோக்களைத் திரும்பப் பெறுவதற்காக (Rembourser) வாடிக்கையாளரின் முழுமையான வங்கி அட்டை விவரங்கள்,

 

காலாவதி திகதி மற்றும் பின்பக்கமுள்ள மூன்று இலக்க ரகசிய எண் (Cryptogramme visuel) ஆகியவை கேட்கப்படுகின்றன.

 

இந்த விவரங்களை நீங்கள் உள்ளீடு செய்த மறுகணமே, சைபர் குற்றவாளிகள் உங்கள் கணக்கிலுள்ள பணத்தை ஈவிரக்கமின்றி முழுமையாகச் சுருட்டிவிடுவார்கள்!

 

இணைய மோசடிகளைக் கண்காணிக்கும் Signal Arnaques தளத்தில், கடந்த சனிக்கிழமை சில மணி நேரங்களிலேயே இதுகுறித்து 170-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்துள்ளன.

 

“உங்களின் உண்மையான தனிப்பட்ட தகவல்கள் துல்லியமாக இருந்தாலும், எதிர்பாராமல் வரும் இத்தகைய

 

மின்னஞ்சல்களில் உள்ள எந்தவொரு இணைப்பையும் எக்காரணம் கொண்டும் சொடுக்க வேண்டாம்;

 

சந்தேகம் இருந்தால் நேரடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரபூர்வ இணையத்தளங்களை மட்டுமே அணுகிச் சரிபார்க்கவும்” என அதிகாரிகள் பொதுமக்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

பணம் பறிக்கும் ஓநாய்கள் டிஜிட்டல் உலகில் புதுப்புது வேடங்களில் உலவுகின்றன… உங்களின் விழிப்புணர்வே உங்களுக்கான மாபெரும் அரண்!

Recommended For You

About the Author: admin