ஒரே நேரத்தில் கூட்டரங்கை விட்டு கூட்டாக வெளிநடப்பு!!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) உரையாற்றுவதற்குச் சற்று முன்பாக,
உலக நாடுகளின் பிரதிநிதிகள் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூட்டரங்கை விட்டு கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.
நெதன்யாகு மேடைக்கு ஏறியபோது, சர்வதேசப் பிரதிநிதிகள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் ஒருங்கிணைந்து அரங்கத்தை விட்டு வெளியேறினர்.
இதன் போது கைதட்டல் ஒலிகளுடன் பிரதிநிதிகள் வெளியேறியதால், நெதன்யாகு பேசத் தொடங்கிய நேரத்தில் பிரம்மாண்ட ஐ.நா பொதுச்சபை அரங்கம் பெரும்பாலும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
இஸ்ரேலின் போர்க் கொள்கைகளுக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் வலுவான மற்றும் குறியீட்டு ரீதியிலான எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த பிரம்மாண்ட வெளிநடப்பு நிகழ்ந்துள்ளது.

