உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதல்: 6 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதல்: 6 பேர் பலி!

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில்

இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

 

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது, எரிசக்தி உள்கட்டமைப்புகள்

 

மீதான பரஸ்பர தாக்குதல் நிறுத்தத்தை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

எனினும், இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற சில மணித்தியாலங்களிலேயே உக்ரைனின் பல்வேறு பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்யா தீவிர வான்வழி மற்றும் ஆளில்லா விமானத் (Drone) தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.

 

இத்தாக்குதல்களில் பொது உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதுடன், ஆறு பேர் வரை உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அமெரிக்காவில் புதிய நிர்வாகத்தின் கீழ் உக்ரைன் – ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,

 

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin