சீன ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை: ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி!

சீன ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை: ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹியூமனாய்டு மற்றும் நான்கு கால்களைக் கொண்ட ரோபோக்கள் மற்றும் மின் இன்வெர்ட்டர்களுக்கு அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மத்திய தகவல் தொடர்பு ஆணைக்குழு (FCC) பிறப்பித்துள்ள இந்த உத்தரவின் மூலம், தரவு மையங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைப்புகளில் பயன்படுத்தப்படும் சீனத் தயாரிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு (AI) விநியோகச் சங்கிலியைப் பாதுகாத்தல், தரவு திருட்டு மற்றும் சைபர் பாதுகாப்பு அபாயங்களைத் தடுத்தலே இதன் முக்கிய நோக்கமாகும்.

 

இந்நடவடிக்கைக்கு வாஷிங்டனிலுள்ள சீனத் தூதரகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், நியாயமற்ற தடைகளை நிறுத்துமாறு கோரியுள்ளது. மேலும், சீனாவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.

Recommended For You

About the Author: admin