ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்: கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என டொனால்ட் டிரம்ப்

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்: கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை!

ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் படைமுகாம்களை இலக்கு வைத்து ஈரான் நடத்திய பால்ஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளதைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

 

ஈரானின் இந்த ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்க வீரர்களுக்குச் சில நிமிடங்கள் மட்டுமே அவகாசம் கிடைத்த போதிலும், அவை வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டதாக Fox News செய்தி நிருபரிடம் பேசிய டிரம்ப் தெரிவித்துள்ளார். “நாங்கள் அவர்களை மிகக் கடுமையாகத் தாக்குவோம், அவர்கள் பலத்த அடியைச் சந்திக்கப் போகிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், ஈராக்கில் ஈரான் ஆதரவு பெற்ற பாராமிலிட்டரி குழுக்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் சவூதி படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்கள் ஈராக் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புடனேயே மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். இக்குழுக்களை “உலகிற்கு ஒரு புற்றுநோய்” எனக் குறிப்பிட்ட டிரம்ப், ஈரான் ஆதரவு பெற்ற ஏனைய குழுக்களுக்கு எதிராகவும் கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பது குறித்துத் தமது நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin