பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராகக் களமிறங்கும் ஜினேடின் ஜிதான்: நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது
பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் (Équipe de France) புதிய பயிற்சியாளராக கால்பந்து உலகின் முடிசூடா மன்னனான ஜினேடின் ஜிதான் (Zinédine Zidane) பொறுப்பேற்கவுள்ளார்
இந்த நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (செவ்வாய்க்கிழமை, ஜூலை 28) நடைபெறவுள்ள சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், அதற்காகக் காத்திருக்காமல், 2026/2027 தேசிய லீக் (Ligue des nations) தொடரின் குழுநிலைப் போட்டிகளுக்கான தகவல்களைச் கால்பந்து சம்மேளனம் தனது இணையதளத்தில் முன்கூட்டியே வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாரிசின் புகழ்பெற்ற ‘ஸ்ரட் து பிரான்ஸ்’ (Stade de France) மைதானத்தில், அக்டோபர் 2-ஆம் திகதி இத்தாலிக்கு எதிராகவும், அக்டோபர் 5-ஆம் திகதி பெல்ஜியத்திற்கு எதிராகவும் இந்த மாபெரும் கால்பந்துப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
பொதுமக்களுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை எதிர்வரும் வரும் ஜூலை 31-ஆம் திகதி மதியம் 2:00 மணிக்குத் தொடங்குகிறது.
ஜிதானின் வருகையால் உந்தப்பட்டுள்ள பிரான்ஸ் ரசிகர்கள் இப்போதே போட்டிகளைக் காணத் தயாராகி வருகின்றனர்!

