பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பகிரங்க ஒப்புதல்!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் தீவிரவாதக் குடியேற்றவாசிகளால் பாலஸ்தீனியர்களுக்கு
எதிராக இன அழிப்புச் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதைப் பிரித்தானிய அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சட்டவிரோதச் செயல்களை இஸ்ரேலிய அரசாங்கம் தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருப்பதுடன்,
அந்நாட்டு அரசாங்கத்தின் சில உறுப்பினர்களே பாலஸ்தீனியர்களின் கட்டாய இடப்பெயர்வை ஊக்கவிக்கும்
வகையில் செயற்படுவதாகப் பிரிட்டன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது.

