99 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் தீயிட்டு அழிப்பு

மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த 99 கிலோகிராம் 478 கிராம் ஹெரோயின் மற்றும் அழிக்க உத்தரவிடப்பட்ட ஏனைய போதைப்பொருட்கள் இன்று (25) காலை தீயிட்டு அழிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டன.

இவை அனைத்தும் புத்தளம், வனாதவில்லு – லேக்டோவத்தை பகுதியில் அமைந்துள்ள சிறப்பு தகன உலையில் வைத்து பாதுகாப்பான முறையில் அழிக்கப்படவுள்ளன.

காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் கண்காணிப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு முக்கிய கட்டமாக நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த அழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin