லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை! 

லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!

பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு லண்டன் பொலிஸார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

இலங்கை மற்றும் இந்திய மக்கள் அதிகளவான தங்க நகைகளைத் தங்களது வீடுகளில் வைத்திருப்பதை இலக்கு வைத்து, இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

 

குறிப்பாக லண்டனின் ஈலிங் (Ealing) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

 

இந்தத் திருட்டுச் சம்பவங்களில் பல தமிழ் குடும்பங்கள் தாலிக்கொடி உள்ளிட்ட மிகவும் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை இழந்துள்ளனர்.

 

வீடுகளை நோட்டமிடும் இந்தக் கொள்ளையர்கள், வீடுகளில் யாரும் இல்லாத சமயங்களில் உள்ளே நுழைந்து கைவரிசையைக் காட்டி வருவதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மட்டுமன்றி, வீட்டிற்குள் இருக்கும் போதும் கதவுகள் மற்றும் ஜன்னல்களை எப்போதும் பூட்டி வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin