இலங்கையில் உருவாகிறது விமான தயாரிப்பு ஆலை – ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் புதிய திட்டம்!

இலங்கையில் VTOL விமான உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான முன்மொழிவை ‘Seahorse Air Ceylon’ எனும் இலங்கை ஸ்டார்ட்அப் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.

மேம்பட்ட வான்வழி நகர்வு (AAM) துறையை மையமாகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனப் பிரதிநிதிகள், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்லவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்நிறுவனம் ஏற்கனவே முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஆராய்ச்சி மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கான ஒழுங்குமுறை அனுமதிகளை எதிர்நோக்கியுள்ளது.

இத்திட்டம் இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையை சர்வதேச அளவில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin