உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடரின் 32-அணிகள் சுற்று, யாரும் எதிர்பாராத பல வியத்தகு திருப்பங்களால் நிரம்பி வழிகிறது.
கால்பந்து உலகின் முடிசூடா மன்னர்களாக வலம்வந்த பலமான அணிகள், தங்களின் கனவுகளைக் கண்ணீரோடு களத்திலேயே விட்டுவிட்டுப் பெட்டி படுக்கைகளைக் கட்டத் தொடங்கியுள்ளன.
நேற்றைய இரவு, கால்பந்து இரசிகர்களின் இதயத்துடிப்பை எகிறச் செய்த ஓர் அசாத்தியமான இரவாகும்.
வரலாறு காணாத அதிர்ச்சி: Allemagne (Germany) வீழ்ந்தது!
உலகக் கிண்ண வரலாற்றில் ‘Penalty என்று வந்துவிட்டால், Allemagne (Germany) அணியை வீழ்த்தவே முடியாது என்ற எழுதப்படாத விதி நேற்று சுக்குநூறாக உடைக்கப்பட்டது. பந்தை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் கோல் அடிக்க முடியாமல் திணறிய Allemagne (Germany) அணியை, முதல் பாதியிலேயே ஒரு அபாரமான கோல் அடித்து மிரட்டியது Paraguay (Paraguay).
இரண்டாம் பாதியில் Allemagne (Germany) சுதாரித்துக்கொண்டு பதில் கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தாலும், காணொளி உதவி நடுவரால் (VAR) நிராகரிக்கப்பட்ட ஒரு கோல் அவர்களின் ஒட்டுமொத்தத் தலையெழுத்தையும் மாற்றியது.
இறுதியில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் தண்டனை உதைச் சுற்றில், கால்பந்து உலகின் மாபெரும் ஜாம்பவானான Allemagne (Germany) மூன்று வாய்ப்புகளைக் கோட்டைவிட்டது. 4-3 என்ற கணக்கில் வென்ற Paraguay (Paraguay), 2002 ஆம் ஆண்டு அடைந்த தோல்விக்குச் சரியா கால்நூற்றாண்டு கழித்துப் பழிதீர்த்துக்கொண்டது!
கடைசி நிமிடப் போராட்டம்: Pays-Bas (Netherlands) அணியை வெளியேற்றிய Maroc (Morocco)!
ஆட்டத்தின் 72-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து Pays-Bas (Netherlands) அணி வெற்றிக் கொண்டாட்டத்திற்குத் தயாரான வேளையில்தான் அந்தப் பேரிடி இறங்கியது. ஆட்டம் முடிவதற்குச் சில நொடிகளே எஞ்சியிருந்த 91-ஆவது நிமிடத்தில், Maroc (Morocco) வீரர் இசா டியோப் மின்னலெனப் பாய்ந்து அடித்த கோல் ஆட்டத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது.
சமனில் முடிந்த ஆட்டம் மீண்டும் வெற்றிவாய்ப்பு உதைக்குச் சென்றது.
அங்கு Maroc (Morocco) அணியின் படுகாப்பாளர் யாசின் போனோ ஒரு இரும்புச் சுவரைப் போல நின்று Pays-Bas (Netherlands) அணியின் கோல் வாய்ப்பைத் தடுத்து நிறுத்த, 3-2 என்ற கணக்கில் சரித்திர வெற்றியைப் பதிவு செய்தது Maroc (Morocco). இவ்வளவு முன்கூட்டியே Pays-Bas (Netherlands) அணி உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறுவது இதுவே முதல்முறையாகும்.
நூலிழையில் நழுவிய வெற்றி: இதயங்கள் உடைந்த Japon (Japan)!
பலம் வாய்ந்த Brésil (Brazil) அணியை எதிர்கொண்ட Japon (Japan), ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மின்னல் வேகத்தில் ஒரு கோல் அடித்து ஒட்டுமொத்த அரங்கத்தையும் அதிர்ச்சியில் உறையவைத்தது.
ஆனால், சாம்பியன்களுக்கே உரிய ஆவேசத்துடன் மீண்டெழுந்த Brésil (Brazil), இரண்டாம் பாதியில் ஆட்டத்தைச் சமன் செய்தது.
ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் செல்லும் என அனைவரும் நகத்தைக் கடித்துக்கொண்டிருந்த 96-ஆவது நிமிடத்தில், Brésil (Brazil) வீரர் கேப்ரியல் மார்டினெல்லி அடித்த அந்த இறுதி நிமிடக் கோல் Japon (Japan) அணியின் இதயங்களைச் சுக்குநூறாக உடைத்தது. முதலில் கோல் அடித்து முன்னிலை பெற்றும் வெளியேற்றுச் சுற்றில் Japon (Japan) தோற்பது இது தொடர்ந்து மூன்றாவது முறையாகும்.
இன்றைய களத்தில் France (France)!
பார்வையாளர்களின் நரம்புகளைப் புடைக்கச் செய்யும் இந்தப் பரபரப்பான சுற்றில், இன்று France (France) அணி பலம் வாய்ந்த Suède (Sweden) அணியை எதிர்கொள்கிறது.
இன்று இரவு 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில், நேற்றைய அதிர்வலைகள் தொடருமா அல்லது நமது அணி ஆதிக்கம் செலுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இவற்றுடன் Côte d’Ivoire (Ivory Coast) – Norvège (Norway) மற்றும் Mexique (Mexico) – Équateur (Ecuador) அணிகளும் இன்று களம் காண்கின்றன

